வித்தியாசமான ஒரு மனிதன் கெட்டப்புக்கு மாறப்போகிறாராம் சிவகார்த்திகேயன்!

ரெமோவில் பெண் வேடத்தில் நடித்த சிவகார்த்திகேயன், இனிமேல் தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கெட்டப்புகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டப்போகிறாராம்.

அந்த வகையில், மோகன்ராஜா இயக்கும் படத்தில் ஆக்சன் வேடத்தில் நடிக்கும் அவர், சண்டை காட்சிகளில் இதுவரை நடிக்காத அளவுக்கு அதிரடியாக நடிக்கப்போகிறாராம்.

அதையடுத்து பொன்ராம் இயக்கத்தில் காமெடி கலந்த கதையில் நடிப்பவர், இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கும் படத்தில் வேற்று கிரகவாசிகள் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க உள்ளார்.

விஷ்ணு நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை படத்தை டைம் மிஷின் கதையில் இயக்கியிருந்தார் ஆர்.ரவிக்குமார்.

அந்த படம் தமிழ் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக்கொடுத்தது. அதனால் அடுத்தபடியாக சிவகார்த்திகேயனை வைத்து தான் இயக்கும் படத்தை ஏலியன் தொடர்பான கதையில் படமாக்க உள்ளார்.

அதாவது, வேற்று கிரகத்தை சேர்ந்த ஒரு மனிதன் நமது கிரகத்தில் வந்திறங்குவது போன்ற கதையாம். அவர் எப்படி வந்திறங்குகிறார். எதற்காக வருகிறார் என்பதை ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் படமாக்கப்போகிறாராம். இந்த படத்திற்காக வித்தியாசமான ஒரு மனிதன் கெட்டப்புக்கு மாறப்போகிறாராம் சிவகார்த்திகேயன்.

Related Posts