வடமாகாண சபையில் உறுப்பினர்களுக்கான ஒழுங்கு விதிகளை நிர்ணயித்து விட்டு, அந்த விதிகளை மீறுவது எவ்வகையில் நியாயமாகும் என ஆளுங்கட்சி உறுப்பினர் ஆயுப் அஸ்மின் கேள்வி எழுப்பினார்.
கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (01) நடைபெற்ற மாதாந்த அமர்வின் போதே அஸ்மின் இந்தக் கேள்வியை எழுப்பினார்.
‘ஒரு அமர்வில் 15 கேள்விகளுக்கு மேல் கேட்கக்கூடாது எனவும், ஒருவர் 3 கேள்விகளைக் கேட்கக்கூடாது எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அத்துடன், கேள்விகள் 150 சொற்களுக்குள் அமைவதுடன் ஒரு கேள்விக்கான நேரம் 30 நிமிடங்களாக நிர்ணயித்திருந்தீர்கள்.
ஆனால், இன்றை அமர்வில் 60 கேள்விகள் கேட்கப்பட்டன. ஆளுங்கட்சி உறுப்பினர் ஆ.பரஞ்சோதி 15 முதற்கேள்வி, 15 உப கேள்விகள் 13 துணைக்கேள்விகள் என 43 கேள்விகளைக் கேட்டிருந்தார். எது எவ்வகையில் நியாயமாக அமையும்’ என்றார்
இதற்குப் பதிலளித்த சி.வி.கே.சிவஞானம், இன்றைய அமர்வை கேள்விக்கான அமர்வாக எடுத்தோம். உறுப்பினர்களிடம் நிறைய கேள்விகள் இருந்தமையால் கேள்வி அமர்வாக நடத்தினோம். அதற்காக நிபந்தனைகளில் தளர்வுகளை ஏற்படுத்தினோம் என்றார்.