விண்ணப்பம் கோரல்

இலங்கை கல்வி நிர்வாக சேவை மற்றும் இலங்கை நிர்வாக சேவை ஆகியவற்றுக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் – 3 க்கு திறந்த போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் 219 பேரும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டி பரீட்சையின் அடிப்படையில் 515 பேரும் அனுபவ அடிப்படையில் 118 பேர் உள்வாங்கப்படவுள்ளனர்.

திறந்த போட்டிப் பரீட்சைக்கு 22 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். மற்றைய இரண்டு பரீட்சைக்கும் 55 வயதுக்குட்பட்டவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்க விரும்புவோர், தமது விண்ணப்பபடிவங்களை,எதிர்வரும் பெப்வரி மாதம் 1ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கவும்.

இதேவேளை, இலங்கை நிர்வாக சேவையின் தரம் -3க்கு திறந்த போட்டிப் பரீட்சை மூலம் 104 பேர் உள்வாங்கப்படவுள்ளனர். இதற்கு 28 வயதுக்குட்பட்டவர்களே விண்ணப்பிக்க முடியும்.

அத்துடன், மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைக்கு 28 பேர் உள்வாங்கப்படவுள்ளனர். இதற்கு 53 வயதுக்குட்டவர்களே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்ப முடிவுத் திகதி பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி ஆகும்.

மேலும் வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு..

Related Posts