விண்ணப்பம் கோரல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடத்தப்படும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் அமைந்த கலைமாணிக் கற்கை நெறிக்கு புதிய மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

க.பொ.த. (உயர்தர) பரீட்சை – 2013 அல்லது அதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட மூன்று பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்து இருப்பதுடன் பொதுஅறிவுப் பரீட்சையில் ஆகக் குறைந்தது 30 சதவீதமான புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதியானவர்கள், தேசிய கல்வியியல் கல்லூரியில் கற்பித்தலில் டிப்ளோமாச் சான்றிதழ் பெற்றவர்கள். ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளில் பயிற்றப்பட்ட அரசாங்கப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் அல்லது பல்கலைக்கழக மூதவையினால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய மேற்குறித்த தகைமைகளுக்குத் தொடர்புடைய அல்லது சமமானது என கருதப்படும் தகைமைகளைக் கொண்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரிகள் பொது உளச்சார்புப் பரீட்சை அல்லது நேர்முகப் பரீட்சை அல்லது இரண்டின் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பப்படிவத்தினை நேரடியாகப் பெற விரும்புவோர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இயங்கும் மக்கள் வங்கிக் கிளையில் விண்ணப்பம் மற்றும் பரீட்சைக் கட்டணமாக ரூபாய் 500ஐ செலுத்தியமைக்கான பற்றுச் சீட்டை சமர்ப்பித்து யாழ்.பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் இருந்து அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

தபால் மூலம் பெற விரும்புவோர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எழுதப்பட்ட ரூபாய் 500க்கான காசுக் கட்டளை தபாற்கட்டளையை சுயமுகவரியிடப்பட்ட ரூபாய் 40 பெறுமதியுடைய முத்திரை ஒட்டப்பட்ட தபால் உறையுடன் உதவிப் பதிவாளர் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம் யாழ்.பல்கலைக்கழகம் திருநெல்வேலி என்ற முகவரிக்கு அனுப்பிப் பெற்றுக் கொள்ளமுடியும். அல்லது www.jfn.ac.lkcodl எனும் இணை முகவரியிலும் பெற்றுக் கொள்ளலாம்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு 021- 222 3612 எனும் தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளும்படி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Related Posts