இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்ப பிரிவின் சேவை பதவிகளுக்கு ஆட்சேர்த்தலுக்காக தகைமை பெற்ற இலங்கைப் பிரஜைகளிடமிருந்துவிண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித்திகதிக்கு 18 வயதுக்கு குறையாதவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவரா கவும் இருத்தல் வேண்டும்.
கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரப் பரீட்சையின் போது சிங்களம் அல்லது தமிழ் அல்லது ஆங்கில மொழி. கணிதம் மற்றும் வேறு இரண்டு பாடங்களுக்கு திறமைச் சித்தியுடன் ஒரே அமர் வில் 6 பாடங்களில் சித்திபெற் றிருத்தல் வேண்டும்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், ஒழுங்கமைப்பு மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைகள் கிளை, இலங்கைப் பரீட்சைத்திணைக்களம், தபால் பெட்டி இலக்கம்1503 கொழு ம்பு என்னும் முகவரிக்கு பதிவுத் தபாலில் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி அல்லது. அதற்குமுன்பதாககிடைக் கத்தக்கதாக அனுப்புதல் வேண்டும்.
மேலதிக தகவல்களை கடந்த வெள்ளிக்கிழமை வெளியான வர்த்தமானி பத்திரிகையில் பார்வையிடலாம்.
கால்நடை உற்பத்தி சுகாதாரதிணைக்களத்தின் ஊடாக பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சிங்களம் அல்லது தமிழ் மொழி, கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்கள் மூன்றிலும் கட்டாயமாக திறமைச் சித்தியும் மேலும் ஒருபாடத்தில் திறமைச்சித்தியுடன் இரு அமர்வுகளுக்கு மேற்படாத வகையில் 6 பாடங்களுடன் க.பொ.த (சா.தர) பரீட்சையில் சித்தியடைந்து இருத்தல் வேண்டும்.
இங்கு ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் திறமைச்சித்திகளுடன் ஆகக் குறைந்தது 5 பாட ங்களிலாவது சித்தியடைந்து இருத்தல் வேண்டும்.
மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் பாடங்களை மேற்கொண்டு இரசாயனவியல், பெளதீகவியல் விவசாயம், உயிரியல் விஞ்ஞானம் போன்ற பாடங்களில் மூன்று பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்து இருத்தல் வேண்டும்.
விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் இறுதித்திகதிக்கு 17 வயதுக்குகுறையாதவராகவும்.25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணிப்பாளர் (மனிதவள அபிவிருத்தி, கால்நடை உற்பத்தி சுகாதாரக் திணைக்க ளம், த.பெ.இலக்கம் 13 பேராதனை என்னும் முகவரிக்கு பதிவுத்தபாலில் எதிர்வரும் நவம்பர்மதம். 9ஆம் திகதி அல்லது அதற்கு முன்பதாக கிடைக்கத் தக்கதாக அனுப்புதல் வேண்டும்.
மேலதிக தகவல்களை கட ந்த வெள்ளிக்கிழமை வெளியான வர்த்தமானி பத்திரிகையில் பார்வையிடலாம்.