மென்பொருள் துறையின் ஜாம்பாவானான மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான “விண்டோஸ் 10” ஆப்ரோட்டிங் சிஸ்டத்தை தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும் விண்டோஸ் 10 மென்பொருளை, அனைத்து விண்டோஸ் மற்றும் விண்டோஸ் மொபைல் பயனாளிகள் இலவசமாக அப்கிரோடு செய்து கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
இதன் மூலம் இந்நிறுவனம் 1 பில்லியனுக்கும் அதிகமான புதிய மொபைல் பயணிகளை பெற திட்டமிட்டள்ளது.
மேலும் மொபைல் உலகில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கிய நிறுவனத்தை கைபற்றியதன் மூலம் களமிறங்கியுள்ளது.
மொபைல் உலகில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் அண்ட்ராய்டு உடன் போட்டி போடவும், அதன் ஆதிக்கத்தை குறைக்கவே இந்த இலவச விண்டோஸ் 10 அறிமுகம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்ரோட்டிங் சிஸ்டம் பிரிவின் தலைவர் டெரி மெர்சன் கூறுகையில் விஸ்டோஸ் 7, 8, 8.1 மற்றும் விண்டோஸ் மொபைஸ் பயன்படுத்தும் அனைத்து பயனாளிகளும் அடுத்த ஒரு வருடத்திற்கு விஸ்டோஸ் 10 ஆப்ரோட்டிங் சிஸ்டத்தை இலவசமாக அப்கிரேடு செய்துகொள்ளலாம் என மெர்சன் தெரிவித்தார்.
இத்துறையில் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் கூகிள் தங்களது மென்பொருளை அவ்வபோது அடுத்த கட்டத்திற்கு கொண்டும் செல்ல வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அப்கிரேடு வசதி அளிக்கும். இதே பார்மூலாவை தற்போது மைக்ரோசாப்ட் காப்பி அடிக்க திட்டமிட்டுள்ளது.
விண்டோஸ் 10 அறிமுக விழாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம், நாம் பேசும் உச்சரிப்பை கொண்டு இணையதளத்தில் தேடும் செயல்திறன் கொண்ட வாய்ஸ் சர்ச் மென்பொருளான கார்ட்டான-வை அறிமுகம் செய்தது.