விண்­ணப்பம் கோரல் :சுகா­தாரம், போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சு

இலங்கை சுகா­தாரம், போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சில் நிறை­வுகாண் தொழில்­வல்­லுனர் சேவைகள் மற்றும் துணை­ம­ருத்­துவ சேவை­களின் பயிற்­சிக்­காக பயி­லு­னர்­களை ஆட்­சேர்க்க விண்­ணப்பம் கோரப்­பட்­டுள்­ளது.

சுகா­தாரம், போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்­சு­விண்­ணப்­பங்­களை கடந்த 24ஆம் திகதி அரச வர்த்­த­மா­னியூடா­க கோரி­யுள்­ளது.

பொதுச்­சு­கா­தார பரி­சோ­தகர் பயிற்­சி­யைத்­த­விர ஏனைய 12 தொழிற்­ப­யிற்­சி­களும் ஆங்­கி­ல­மொ­ழி­மூ­லத்தில் நடத்­தப்­படும்.

மருத்­துவ ஆய்­வு­கூட தொழி­ல்நுட்­ப­வி­ய­லாளர், மருந்­தாளர், பற்­சி­கிச்­சை­யாளர், இத­யத்­து­டிப்பு பதி­வாளர் உள்­ளிட்ட 12 ப­யிற்சி நெறிகள் 2 வரு­ட­காலம் இடம்­பெறும்.

பொது­வாக க.பொ.த. (சா.த) பரீட்­சையில் சித்­தி­பெற்­றி­ருப்­ப­துடன் க.பொ.த. உயர்தர விஞ்­ஞான பிரிவில் சித்­தி­ய­டைந்­தி­ருக்­க­வேண்டும். 18- – 35வய­திற்­குட்­பட்ட ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் இறுதித் திகதி ஜூலை 20 ஆகும்.

Related Posts