விடைபெறும் டில்ஷான்

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திலஹரத்ன டில்ஷான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

329 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 10,248 ஓட்டங்களை குவித்துள்ளதோடு, 22 சதங்கள் மற்றும் 47 அரைச்சதங்களையும் பெற்றுள்ளார்.

மேலும் 78 இருபதுக்கு இருபது போட்டிகளை சந்தித்துள்ள அவர், 1 சதம் 13 அரைச்சதங்கள் அடங்களாக 1884 ஓட்டங்களை விளாசியுள்ளார்.

39 வயதாகும் டில்ஷான் அண்மையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 28ம் திகதி தம்புள்ளையில் இடம்பெறும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி மற்றும் 20க்கு இருபது போட்டிகளுடன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வை நிறைவு செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related Posts