பரீட்சை விடைத்தாளுடன் பணநோட்டுக்களை இணைத்து கொடுக்கும் பரீட்சார்த்தி யார் என கண்டறிந்து அவர் விசாரணைக்காக பரீட்சை திணைக்களத்துக்கு அழைக்கப்படுவார் என பரீட்சை ஆணையாளர் டபிள்யூ. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.
கடந்த முறை நடைபெற்ற பரீட்சையின் போது தமிழ் மொழி மூல விடைத்தாளுடன் 5000 ரூபா பண நோட்டுக்கள் மூன்று விடைத்தாளுடன் இணைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல. மிகவும் மனமுருகக் கூடியவாறு வசனங்களையும் பரீட்சார்த்தி எழுதியிருந்தார்.
இவ்வாறு செய்வதால் எவரும் சித்தியடையப் போவதில்லை. விடைத்தாள்களை நன்கு படித்து விளங்கிக் கொண்ட பின்னர் பதில் அளித்தால் மட்டுமே போதுமானது என்றும் தெரிவித்தார்.
விடைத்தாளுடன் இணைக்கப்படும் ரூபா நோட்டுக்கள் அரசின் கணக்கில் வைப்பிலிடப்படுமே தவிர பரீட்சார்த்திக்கு எதுவும் நடைபெறப் போவதில்லை.
சில பரீட்சார்த்திகள், தங்களுடைய கஷ்டங்கள் எல்லாவற்றையும் எழுதி இருப்பார்கள். ஆனால் ஒரு கேள்விக்கும் பதில் எழுதி இருக்க மாட்டார்கள். இந்த நிலையை பரீட்சார்த்திகள் தொடர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.