விடுவிக்கப்பட்ட பகுதிகளை வடமாகாண முதலமைச்சர் நேரில் பார்வை!

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேவரன் இன்று(7) மாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இன்று மாலை 4 மணியளவில் முதலமைச்சர் மேற்படி பகுதிகளை பார்வையிட்டதுடன், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிறீமோகனன் மற்றும் முன்னாள் வலி, வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் ஆகியோருடனும் மீள்குடியேறியுள்ள மக்களிடமும் தேவைகள் மற்றும் மேலும் மீள்குடியேற்றப்படவேண்டிய பகுதிகளின் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

Related Posts