விடுவிக்கப்பட்ட காணிகளை விரைவில் பயன்படுத்துங்கள் – வடக்கு ஆளுநர்

விடுவிக்கப்பட்ட காணிகளை இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மக்கள் பாவனைக்கு உட்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் இதுகுறித்த அறிவிப்பை பிரதேச செயலாளர்கள் காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறும் அவர் கூறியுள்ளார்.

ஆளுநர் செயலகத்தில், நேற்றையதினம் பிரதேச செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இதன்போது, யாழ். மாவட்டத்திலுள்ள மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, வீட்டுத்திட்டம், வீடமைப்பு என்பவற்றின் உண்மை நிலவரங்களை பிரதேச செயலாளர்களிடம் தனித்தனியாக ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கேட்டறிந்தார்.

இதன் பின்னர் கருத்துரைத்த ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், விடுவிக்கப்பட்ட காணிகளை, இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மக்கள் பாவனைக்கு உட்படுத்த வேண்டுமென்பதை, பிரதேச செயலாளர்கள் காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறு பணித்தார்.

Related Posts