விடுதலைப் புலிகள் எனக் கூறி கப்பம் பெற்ற இருவர் கைது

arrest_1தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ். மாவட்டத் தலைவர்கள் எனக் கூறி 12 இலட்சம் ரூபாவினைக் கப்பமாகப் பெற்ற இருவரை கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி, பரந்தன் சந்திப் பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையிலான விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் திருநகர் மேற்கு, கிளிநொச்சி மற்றும் குருக்கள் வீதி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

இருவரும் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் விசாரணை பின்னர் யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts