விடுதலைப் புலிகளின் தலைவரை ஒழித்துக்கட்டுவதில் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் பூரண ஆதரவு!

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்றுவதற்காக அமெரிக்கா மற்றும் நோர்வே போன்ற நாடுகள் எடுத்த முயற்சிகளுக்கு இந்தியா தனது எதிர்ப்பை வெளியிட்டதாக இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலரும், பாதுகாப்புச் செயலருமான சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

siva-sankar-menon

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் எழுதிய ஆங்கில நூலிலே இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரபாகரனை மீட்பதற்கு அமெரிக்காவும், நோர்வேயும் கடும் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், இந்திய அரசாங்கமானது கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், இந்திய அரசாங்கத்துக்கு அப்போதை தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தமது அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தனிப்பட்ட ரீதியாகவும் மிகவும் ஆக்கபூர்வமான வகையில் ஆதரவை வெளிப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் சிறீலங்காவிலுள்ள உண்மையான அரசியல் தலைவர்களை இல்லாது ஒழித்ததைப்போன்று, இந்தியாவில் உள்ள உண்மையான தமிழர்களின் தலைவர்களையும் இல்லாது ஒழிப்பதன் மூலமாக மாத்திரமே தமிழீழத்தைப் பெறமுடியும் என தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் தமது அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் அறிந்திருந்ததாகவும் அவர் தனது நூலில் தெரிவித்துள்ளார்.

Related Posts