விடுதலைப்புலிகள் நடாத்திய பொங்குதமிழமை விக்னேஸ்வரன் நடாத்துகிறார்!

விடுதலைப்புலிகள் நடாத்திய பொங்குதமிழை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடாத்த முயற்சிப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.

விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் பேரவையினால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி கிளிநொச்சியிலும் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் பொங்கு தமிழ் நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக இங்கே விடுதலைப்புலிகள் பொங்குதமிழ் நிகழ்வுகளை நடாத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2002ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையில் மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு போன்ற இடங்களில் பொங்கு தமிழ் நிகழ்வு நடத்தப்பட்டிருந்தது.

தமிழ் மக்கள் பேரவையால் நடாத்தப்படவுள்ள இந்நிகழ்விற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் இதுவரை எந்தக் கருத்தினையும் வெளியிடவில்லையெனவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related Posts