விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளை கேவலப்படுத்தியவருக்கு திமுகவில் எம்.எல்.ஏ சீட்

“விடுதலைப்புலிகள் மீது “பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர்”என்று அபாண்டமாக குற்றம் சாட்டியவருக்கு திமுக கூட்டணியில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சீட் கொடுக்கப்பட்டுள்ளது!

sivakamy-india-mla

இதுவரை விடுதலைப்புலிகள் மீது, ‘பெண்களை கற்பழித்தார்கள் என்றோ, பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தினார்கள்’ என்றோ சிங்கள பேரினவாதிகள் கூட குற்றம் சாட்டியதில்லை.

ஆனால், பெண் புலிகளை ஆண்களின் இச்சைக்காகவே படைகளில் பயன்படுத்தினார்கள் என்று வெளிப்படையாக குற்றம் சுமத்தினார் சிவகாமி ஐஏஎஸ். புதியதலைமுறை டிவியில் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்த சிவகாமிக்கு திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒரு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

சிவகாமிக்கு ஒரு சீட்: கலைஞரின் வஞ்சம் தீர்க்கும் முயற்சி!

விடுதலைப் புலிகள் அமைப்பினர் எம்ஜிஆருடன் இணக்கமாக இருந்தனர் என்கிற ஒரே காரணத்திற்காக அவர்களை பழி தீர்க்க அலைந்தார் கலைஞர் என்று கூறப்படுகிறது. தனிப்பட்ட வன்மத்தின் காரணமாக ஈழ இனப்படுகொலையில் காங்கிரசுக் கட்சி ஈடுபட்ட போது அதற்கு துணை போனார் கலைஞர் என்கிற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

இத்தனைக்கு பிறகும் மனம் ஆறாத கலைஞர், இப்போது “விடுதலைப்புலிகள் பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர்” என்று சொன்ன சிவகாமி என்பவருக்கு திமுகவில் எம்.எல்.ஏ சீட் கொடுத்துள்ளார்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்து பேட்டியெடுத்த பிரபல ஊடகவியலார் அனிதா பிரதாப் குறிப்பிட்டது ‘தான் ஒரு இரவு முழுவதும் 20க்குமே மேற்பட்ட விடுதலை புலிகளுடன் தங்கியிருந்ததாகவும் ஒரு நொடிகூட தான் ஒரு பெண் என்ற அச்சமேற்படாதாவாறு அவர்கள் பார்த்துக்கொண்டார்கள்’ என்றும் வியந்து போற்றிய ஒரு இயக்கம் பற்றி தான், எதிரியான சிங்களனே வைக்காத ஒரு குற்றச்சாட்டை சிவகாமி ஐஏஎஸ் வைத்துள்ளார்.

இன்று வரை பல நாடுகளின் ராணுவங்களில் பெண்கள் உதவியாளர்களாகவும், நர்ஸ், டாக்டர் போன்ற பணிகளையும் மட்டுமே செய்து வருகிறார்கள், ஆனால் புலிகள் இயக்கம் தான் பெண்களை போர்களத்திற்கு அனுப்பியது, மாலதி படையணி, சோதியா படையணி போன்ற அணிகள் ஆண் போராளிகளுக்கு இணையாக பல போர்களில் பங்கேற்றனர்.

ஈழப்போரின் கடைசி நாட்களான 2009 ஏப்ரல் மாதம் 1,2,3ம் நாட்களில் நடந்த போரில் புலிகளின் பெண்கள் அணி சிங்கள ராணுவத்துக்கு பேரழிவை ஏற்படுத்தியது என்று சிங்கள ராணுவதளபதிகளே குறிப்பிட்டனர். இப்படி போர்களத்தில் பங்கேற்று போராடிய ஒரு இயக்கத்தை பற்றி தான் சிவகாமி ஐஏஎஸ், ‘பாலியல் இச்சை’ எனும் கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவருக்கு திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒரு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Posts