விடுதலைப்புலிகளின் தலைவரைப்போன்று விக்னேஸ்வரன் நீண்டதூரம் பயணிக்கமுடியாது!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் அதிக தூரம் பயணிக்கமுடியாது என பீல்ட் மார்ஷலும் தற்போதைய அமைச்சருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வடக்கில் எழுக தமிழ் பேரணியை நடாத்திய அவர், இணைந்த வடக்குக் கிழக்கில் சுயாட்சியை கோரியுள்ளார். இது தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மக்கள் இராணுவத்துக்கோ, சிங்கள மக்களுக்கோ எதிரானவர்கள் அல்ல. வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்ற இனவாதம் பேசுபவர்களாலேயே தமிழர்கள் அவ்வாறு நோக்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அரசியல் செய்யத் தெரியாது எனவும், தலைவர் பிரபாகரனைப்போன்று அவரால் நீண்டதூரம் பயணிக்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts