விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது!! – அமெரிக்கா

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவினால் நேற்று(திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதம் குறித்த 2021ஆம் ஆண்டிற்கான அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தி நிதிதிரட்டி தமது செயற்பாடுகளிற்கு பயன்படுத்துகின்றனர் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

2009இல் இலங்கை அரசாங்கத்தினால் இராணுவ ரீதியில் தோல்வியடைந்த போதிலும் விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆதரவாளர்கள் வலையமைப்பும் நிதி ஆதரவும் தொடர்கின்றது எனவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

2009 முதல் விடுதலைப்புலிகள் அமைப்பு செயல்பாடின்றி உள்ளது. 2009ஆம் ஆண்டின் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் எந்த தாக்குதல்களும் பதிவாகவில்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Related Posts