விடுதலைப்புலிகளின் காலத்தில் சிறந்த நிர்வாகக் கட்டமைப்புக்கள்: அங்கஜன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் நல்ல நிர்வாகக் கட்டமைப்புக்கள் காணப்பட்டன என்று நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சாரமண்டபத்தில் சர்வதேச தொழிலாளர் சங்கமும் ஸ்ரீலங்கா சுதந்திர தொளிலாளர் சங்கமும் இணைந்து நடாத்திய விழிப்புணர்வுக் கல்விக்கருத்தரங்கில் பிரதம விருந்தினராக கலந்து உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் தொழிலாளர்கள் தமக்குரிய உரிமைகள் சலுகைகள் மற்றும் சட்டங்கள் என எதையும் அறியாதவர்களாய் இருக்கின்றார்கள்.

இத்தகைய செயலால் முதலாளி வர்க்கம் தொழிலாளர்களை சுரண்டுகிறார்கள். ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான சூழ்நிலைகள் அரிதாகவே காணப்பட்டன.

ஏனெனில் அவர்களது கட்டமைப்புக்கள் திடமானவையாகவும் தெளிவானவையாகவும் காணப்பட்டதென தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வில் SLNSS இன் பொதுச்செயலாளர் வெஸ்லி தெய்வேந்திரா மற்றும் தொழிலாளர் பிரதி ஆணையாளர் திருமதி ஜெகதீஸ்வரி மற்றும் வளவாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் என இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts