விஜய் 61 : வெளிநாடுகளில் படப்பிடிப்பு!, ஏஆர் ரஹ்மான் இசை!!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ஏகே57 படத்தின் கதை முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடைபெறுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் கதையும் வெளிநாடுகளில் நடைபெறுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளதாக கௌதம் மேனனே தெரிவித்துள்ளார்.

இந்த வரிசையில் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படமும் சேருகிறது. பொங்கல் ரிலீசாக வருகிற 12 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கும் ‘பைரவா’ படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

‘தெறி’ பட வெற்றியை தொடர்ந்து அட்லியும், விஜய்யும் மீண்டும் இணையும் இப்படத்தை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இந்த படத்தின் கதை வெளிநாடுகளில் நடப்பது மாதிரி அமைக்கப்பட்டுள்ளதால் இயக்குனர் அட்லி, தயாரிப்பாளர் என்.ராமசாமி உட்பட படக்குழுவினர் சமீபத்தில் சில வெளிநாடுகளுக்கு சென்று லொகேஷ்னகளை தேர்வு செய்து வந்தனர்.

இப்படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் முதல் வாரம் துவங்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இன்னொரு பிரம்மாண்ட படமான ‘சங்கமித்ரா’ படத்திற்கு இசை அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மானே விஜய் படத்திற்கும் இசை அமைக்கவிருக்கிறார்.

Related Posts