‛விஜய்61′ பட தலைப்பு மூன்றுமுகமா?

தெறி படத்தை தொடர்ந்து விஜய்யும், அட்லியும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் விஜய்-61. விஜய் உடன் சமந்தா, காஜல், நித்யா மேனன் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

இவர்கள் தவிர எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, சத்யன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடக்கிறது, அடுத்தப்படியாக வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது.

விஜய் 61 படத்திற்கு இன்னும் அதிகாரப்பூர்வமான தலைப்பு வெளியாகவில்லை. ஆனால் தளபதி, மூன்றுமுகம், அண்ணாமலை என பல பெயர்கள் அடிப்பட்டன. இந்நிலையில் சமூக வலைதளங்களில் தற்போது விஜய்-61 படம் தொடர்பாக ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதில் படத்திற்கு ‛மூன்றுமுகம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான தலைப்பு போன்றே இந்த போஸ்டர்கள் உள்ளன. அதேசமயம் இயக்குநரோ, தயாரிப்பாளரோ இப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருந்தாலும் இந்த போஸ்டர் டிரெண்ட்டாகி வருகிறது.

விஜய்-61 படத்தில் மூன்று விதமான ரோல்களில் விஜய் நடிக்கிறார். ஆகையால் படத்திற்கு மூன்றுமுகம் என்ற தலைப்பு பொறுத்தமாக இருக்கும் என்பதால் இந்த தலைப்பு தான் உறுதியாக வைக்கப்படும் என தெரிகிறது.

Related Posts