`விஜய் 61′ படத்தில் விஜயின் கதாபாத்திரம் என்ன?

‘பைரவா’ படத்தை தொடர்ந்து விஜய், அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் கதாநாயகிகளாக ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வைகைப்புயல் வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒரு பகுதி 80-களில் நடப்பது போன்று எடுக்கப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தயாராகி வரும் இப்படத்தில், ஒரு கதாபாத்திரத்தில் விஜய் போலீஸ் வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக அட்லி இயக்கிய `தெறி’ படத்தில் விஜய் ஸ்டைலிஷ் போலீசாக நடித்திருந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், `விஜய் 61′ படத்திலும் விஜய் போலீஸ் கெட்டப்பில் நடிப்பதாக வந்துள்ள தகவலால் இப்படத்திலும் விஜய் ரசிகர்களுக்கு பிரம்மாண்ட விருந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு முன்னதாக விஜய் `போக்கிரி’, `ஜில்லா’, `தெறி’ படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரிக்கிறது.

Related Posts