விஜய்-61ல் இணைந்தார் ஆண்டவன் கட்டளை அதிகாரி!

மலையாள திரையுலகில் ‘லெப்ட் ரைட் லெப்ட்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ஹரீஷ் பெராடி. கம்யூனிஸ சிந்தனையுடன் உருவான அந்தப்படத்தில் அரசியல் ராஜதந்திரங்களை உள்ளடக்கிய அமைச்சராக மிக அருமையாக வில்லத்தனம் காட்டியிருந்தார் ஹரீஷ் பெராடி… அதன்பின் தற்போது அங்கே முன்னணி நடிகர்கள் படங்களில் தவறாது இடம்பெறவும் ஆரம்பித்து விட்டார். குறிப்பாக கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘புலி முருகன்’ படத்தில் ஜெகபதிபாபுவின் வலது கையாக ‘சாமி’ என்கிற கேரக்டரில் பிரமாதமான நடிப்பை வெளிபடுத்தி இருந்தார் ஹரீஷ் பெராடி.

அதேப்போல தமிழிலும் இவருக்கான அழைப்பு இருக்கவே செய்கிறது. கடந்த வருடம் சசிகுமார் நடிப்பில் வெளியான ‘கிடாரி’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார் ஹரீஷ் பெராடி. அடுத்ததாக விஜய்சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் பாஸ்போர்ட் விசாரணை அதிகாரியாக கடைசி இருபது நிமிடங்களில் மிரட்டி இருந்தார். இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஹரீஷ் பெராடி.

Related Posts