விஜய் 60 படப்பிடிப்பு தொடங்கியது!

தெறி படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

vijay

விஜய் 60 என்று குறிப்பிடப்படும் இந்தப் படத்தை பரதன் இயக்கி வருகிறார். கில்லி, வீரம் போன்ற படங்களின் வசனகர்த்தாக பணியாற்றிய பரதன், விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கியுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார். விஜய்யின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஜகபதி பாபு, டேனியல் பாலாஜி, ஸ்ரீமன், சதீஷ், ஆடுகளம் நரேன், அபர்ணா வினோத் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

விஜய் 60 படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அப்போது இரு நாள் படப்பிடிப்பு மட்டும் நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது. தொடக்கப் பாடலுடன் தொடர்ந்து 60 நாள்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

விஜய் 60 2017 பொங்கல் அன்று வெளியாகிறது.

Related Posts