விஜய் 58-வது படத்தின் தலைப்பு வெளியானது

‘கத்தி’ படத்திற்கு பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், ரசிகர்களும் இப்படத்தின் தலைப்பை பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

vijay-new

இப்படத்திற்கு முதலில் ‘மாரீசன்’, ‘கருடா’, ‘போர்வாள்’ ஆகிய பெயர்கள் பரிசீலனையில் இருந்து வந்தது. இன்று படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி, படத்திற்கு ‘புலி’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த தலைப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர். சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். முன்னாள் கதாநாயகி ஸ்ரீதேவியும், ‘நான் ஈ’ புகழ் சுதீப்பும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். சிபுதமீம் மற்றும் பி.டி.செல்வகுமார் இருவரும் இணைந்து இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகின்றனர். கோடை விடுமுறை கொண்டாட்டமாக இப்படம் வெளிவர இருக்கிறது.

Related Posts