விஜய்-விக்ரமை இணைக்கும் ஷங்கர்!

நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமான விஜய்யும், அமராவதியில் அறிமுகமான அஜீத்தும், ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதில் விஜய் முதன்மை நாயகனாகவும், அஜீத் இரண்டாவது நாயகனாகவும் நடித்தனர்.

vijay-vikram

அதன்பிறகு இப்போதுவரை அவர்கள் இணையவில்லை. அவர்களை இணைத்து படமெடுக்கப்போவதாக சொல்லி வந்த வெங்கட்பிரபுவும் முயற்சி எடுத்து அது ஒர்க்அவுட்டாகவில்லை என்பதால் பின்வாங்கிவிட்டார்.

இந்தநிலையில், விஜய்யுடன் விக்ரமை இணைத்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் 2.ஓ படத்திற்கு பிறகு ஒரு படம் இயக்கயிருப்பதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் அந்நியன், ஐ படங்களில் விக்ரமும், நண்பனில் விஜய்யும் நடித்திருப்பதால் அவர்களை மீண்டும் இணைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லையாம்.

அதோடு, சினிமாவில் எப்படி போட்டியாளர்களாக இல்லையோ அதேபோல் திரைக்குப்பின்னால் விஜய்-விக்ரம் இருவரும் நல்ல நண்பர்களாகவும் உள்ளனர்.

ஒருவர் வீட்டிற்கு இன்னொருவர் குடும்பத்துடன் செல்லும் அளவுக்கு பேமிலி ப்ரண்டுகளாக உள்ளனர். அதனால் அவர்களை வைத்து படம் பண்ணுவதில் எந்தவித சிரமமும் இருக்காது என்று நினைக்கிறார் ஷங்கர்.

Related Posts