விஜய், முருகதாஸ் படத்துக்கு மூன்று ஹீரோயின்கள்?

விஜய் இப்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன் என்று மூன்று ஜோடிகள்.

விஜய் அடுத்து நடிக்கவிருப்பது ஏஆர்முருகதாஸ் இயக்கத்தில்.

ஏஆர்.முருகதாஸ் – விஜய் இணைகிறார்கள் என்பது மட்டும் தான் உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரகுல்ப்ரீத் சிங் நடிக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

ரகு ப்ரீத் சிங் இப்போது ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது.

ரகுல்ப்ரீத் சிங்குக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. எனவே ரகுலை கமிட் பண்ண தமிழ் தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள். ரகுல் தவிர சமீபகாலமாக பாலிவுட்டில் கலக்கி வரும் டாப்ஸி, எமி ஜாக்ஸன் ஆகியோர் பெயர்களும் விஜய படத்துக்கு அடிபடுகின்றன.

Related Posts