விஜய் மக்கள் இயக்க தலைவர் அடித்துக் கொலை!

விஜய் தன்னுடைய மக்கள் இயக்க தலைவர் கொலை செய்யப்பட்டதை அறிந்து அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

கூடுவாஞ்சேரி, விஸ்வநாதபுரம், 3-வது தெருவை சேர்ந்தவர் இமயம் ரவி (வயது 48). ஓவியரான இவர் காஞ்சீபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவராக இருந்தார். விஜய் நடித்த ‘பைரவா’ திரைப்படம் கடந்த 12-ந் தேதி ரிலீஸ் ஆனது. இதற்காக 11-ந் தேதி இரவே ரசிகர்கள் தியேட்டர்களை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தியேட்டரில் செய்யப்பட்டுள்ள அலங்கார ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக 11-ந் தேதி இரவு இமயம் ரவி வந்து இருக்கிறார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமைடந்த அவரது குடும்பத்தினர் நாலாபக்கமும் இமயம் ரவியை தேடி வந்தனர்.

இந்நிலையில், இமயம் ரவி காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை பாலாற்று பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை அறிந்த போலீசார் அவரது பிணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 3 வாலிபர்கள் இமயம் ரவியிடம் இருந்த செல்போன், ரூ.250 பணத்தை பறிக்க முயற்சித்தபோது, அவர்களுடன் நடந்த மோதலில் இமயம் ரவி கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தனது மக்கள் இயக்க தலைவர் இமயம் ரவி கொலை செய்யப்பட்டது குறித்து அறிந்த நடிகர் விஜய், அவரது இல்லத்துக்கு நேரில் சென்று இமயம் ரவியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Related Posts