விஜய் பிறந்த நாளில் வெளியாகும் புலி?

கத்தி’ படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் ‘புலி’. இப்படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருகிறார்கள். ஸ்ரீதேவி கபூர், நான் ஈ சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார்.

puli_vijay

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் 3 வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தை விஜய்யின் பிறந்தநாளான ஜுன் 22-ந் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.

அன்றைய தேதியில் வெளியானால் விஜய் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக இப்படம் இருக்கும் என முடிவெடுத்து, தற்போது இப்படத்தின் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்களாம்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நட்டி நடராஜ் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தை பி.டி.செல்வகுமார், ஷிபுவுன் தமீன்ஸ் நிறுவனம் இருவரும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.

Related Posts