விஜய் பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு காத்திருக்கும் மற்றொரு விருந்து

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு `இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜுன் 22-ஆம் தேதி வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதேநோளில் விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மற்றொரு அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, விஜய்யின் 62-வது படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விஜய் பிறந்தநாளில் வெளியானால் விஜய் ரசிகர்களுக்கு அது இரட்டை விருந்தாகும்.

Related Posts