விஜய் பிறந்தநாளில் அஜித் படம் ரிலீஸ்?

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் வேகவேகமாக வளர்ந்து வருகிறது.

சி-3 படத்தில் சூர்யா நடிப்பது போன்று சர்வதேச போலீஸாக இந்தப் படத்தில் அஜித் நடிக்கிறார்.

இந்தப்படத்தில் அஜித்தின் மனைவியாக காஜல் அகர்வால் நடித்துள்ளதாக தகவல் அடிபடுகிறது. முக்கிய வேடமொன்றில் அதாவது அஜித்தின் உதவியாளராக கமலின் இளைய மகள் அக்ஷராஹாசன் நடித்திருக்கிறார்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பை அறிவிக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.

படத்தின் ரிலீசுக்கு சில தினங்களுக்கு முன்னர்தான் தலைப்பை அறிவிக்க வேண்டும் என்பதுதான் அஜித்தின் கொள்கை. அதற்கு மாறாக அஜித்தின் மனசை மாற்றி, நேற்று இரவு சரியாக 12.01 மணியளவில் (அதாவது வியாழக்கிழமை அதிகாலை) படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். விவேகம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை வரும் கோடை விடுமுறையில் வெளியிடத் திட்டமிட்டிருந்தார்கள்.

இப்போது அதில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளது, அதாவது விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Related Posts