விஜய் பட வேலைகளை தொடங்கினார் அட்லி

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் தெறி. சமந்தா-எமிஜாக்சன் என பலர் நடித்த அந்த படம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

vijay-adly

அதனால் அஜீத்தை வைத்து வீரம், வேதாளம், அஜீத்-57 ஆகிய படங்களை தொடர்ச்சியாக சிறுத்தை சிவா இயக்கி வருவது போன்று அட்லிக்கும் உடனடியாக விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.

அதையடுத்து அழகிய தமிழ் மகன் பரதனுக்கு அடுத்து கால்சீட் கொடுத்து பைரவாவில் நடித்து வருகிறார் விஜய்.

இந்த நிலையில், விஜய் நடிக்கும் 61-வது படத்தை அட்லி இயக்குவதற்கான பேச்சுவார்த்தை, கதை விவாதம் என அனைத்தும் முடிந்து விட்டது. தற்போது பைரவா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருந்து வரும் விஜய், நவம்பர் மாதத்திற்குள் அந்த படத்தை முடித்து விட்டு, அடுத்தபடியாக அட்லி இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறாராம்.

விரைவில் பைரவா படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் வெளியாகயிருக்கும் நிலையில், தனது புதிய படத்தின் அறிவிப்பினையும் வெளியிட தயாராகிக்கொண்டிருக்கிறார் அட்லி.

Related Posts