விஜய் படத்தை இயக்கும் அட்லி

கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வசூலில் சாதனைப் படைத்த படம் ‘துப்பாக்கி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அடுத்தப் படத்திற்கு விஜய் கால்ஷீட் தரவுள்ளதாக தகவல் வந்தது. தற்போது விஜய், கலைப்புலி தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

26c541a4-c0f6-44e1-8fca-b343b6b0a2fd_S_secvpf

இப்படத்தை இயக்குபவர் அட்லி. இவர் ஏற்கனவே ஆர்யா-நயன்தாரா நடிப்பில் உருவான ‘ராஜா ராணி’ என்ற வெற்றி படத்தை இயக்கியவர். சமீபத்தில் இவருக்கும் நடிகை பிரியாவிற்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அட்லி இயக்கும் அடுத்த படத்தை பாக்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியானது. தற்போது கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் நடிப்பில் தற்போது ‘கத்தி’ படத்தின் இறுதிக்கட்ட வேலை நடந்து வருகிறது. இப்படத்தையடுத்து சிம்பு தேவன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்பிறகு அட்லி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

Related Posts