விஜய் படத்துக்கு தலைப்பு உறுதியானது?

விஜய் தற்போது அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விஜய்க்கு 59-வது படம் என்பதால் விஜய் 59 என்ற தலைப்பு வைத்தே அழைத்து வந்தனர். இந்நிலையில், இப்படத்திற்கு ‘காக்கி’, ‘வீரன்’ ஆகிய தலைப்புகளை படக்குழுவினர் பரிசீலனை செய்து வந்தனர்.

இந்த படத்தில் விஜய், போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் இந்த தலைப்புகளை பரிசீலித்து வந்தனர். தற்போது, இந்த தலைப்புகளையெல்லாம் தவிர்த்து விட்டு ‘தாறுமாறு’ என்று புதிய தலைப்பு வைத்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

ஏற்கெனவே, ஜீவா நடிக்கும் ஒரு படத்துக்கு ‘தாறுமாறு’ என்று பெயர் சூட்டப்பட்டு கடைசி நேரத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது, அந்த தலைப்பை விஜய் பெற்றுள்ளார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

Related Posts