விஜய் படத்தில் மம்முட்டி நடிக்க மறுத்தது இதனால் தான்!

‘தனி ஒருவன்’ படத்தின் ஸ்பெஷலே, ஒருகாலத்தில் சார்மிங் ஹீரோவாக வலம் வந்த அரவிந்த்சாமி அந்தப்படத்தின் வில்லனாக நடித்தது தான். அதேபோலத்தான் தற்போது விஜய்க்காக உருவாக்கியிருக்கும் கதையில் மாஸ் ஹீரோ ஒருவர் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என முதலில் நினைத்தார்களாம்.

vijay-mammuddy

அதற்காக படத்தின் இயக்குனர் பரதன், மம்முட்டியை இந்தப்படத்திற்குள் இழுக்க முயற்சி செய்ததாராம். ஏற்கனவே தமிழ்சினிமாவில் மோகன்லாலை அழைத்து ‘ஜில்லா’விலும், சுரேஷ்கோபியை வில்லனாக ‘ஐ’ படத்திலும் நடிக்க வைத்துவிட்டதால் மம்முட்டியையும் தமிழுக்கு இந்தவிதமாக அழைத்து புதிய முகமாக காட்டலாம் என முடிவானதாம்.

ஆனால் மம்முட்டிக்கு கதை பிடித்திருந்தும் கூட இந்தப்படத்தில் அவர் நடிக்க மறுத்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மம்முட்டியை பொறுத்தவரை வில்லனாக நடிப்பதில் அவருக்கு தயக்கம் இல்லையாம். ஆனால் இளம் ஹீரோவுக்கு எதிரான வழக்கம்போல டிபிக்கல் வில்லனாக நடிப்பதில் தான் அவருக்கு உடன்பாடு இல்லையாம். துரதிர்ஷ்டவசமாக விஜய் படத்தில் அவர் எதிர்பார்த்தது போல கதாபாத்திரம் அமையவில்லையாம்.

தவிர சின்ன பட்ஜெட் படங்களில் தன்னை முன்னிலைப்படுத்தும் விதமான நெகட்டிவ் கேரக்டர்கள் என்றால் அதில் நடிப்பதற்கும் உடனே தயாராக இருக்கிறாராம் மம்முட்டி. விஜய் படம் என்றாலும், வழக்கமான ஒரு வில்லன் கேரக்டரில் நடித்து இனி புதிதாக என்ன சாதிக்கப்போகிறோம் என்றுதான் மம்முட்டி மறுத்துவிட்டாராம்.

Related Posts