பாலிவுட்டில் கொடி கட்டி பறக்கும் இயக்குனர்களில் பிரபுதேவாவும் ஒருவர். இவர் நடிப்பில் தமிழில் படங்கள் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. தங்கர் பச்சன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ’களவாடிய பொழுதுகள்’ படமும் இன்னும் ரிலிஸாகாமல் உள்ளது.
தற்போது மீண்டும் பிரபுதேவாவிற்கு நடிக்கும் ஆசை வந்துள்ளது. ஏற்கனவே திரு இயக்கத்தில் ஜெய்க்கு அண்ணனாக நடிக்க இவருக்கு வாய்ப்பு வர, அதை மறுத்து விட்டார்.
இந்நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கவிருக்கும் ஒரு படத்தில் பிரபுதேவா நடிக்கவிருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.