விஜய் படத்தில் கமல் பட வில்லன்!

விஜய் நடித்து வரும் பைரவா படத்தை மலையாள பட இயக்குனர் பரதன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், ஜெகபதிபாபு, அபர்ணா வினோத், பாப்ரிகோஷ், சதீஷ், மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியேல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன் என பலர் நடிக்கின்றனர். இவர்கள் தவிர, அப்பா-அம்மா கேரக்டர்களில் சில மலையாள நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.

bairava

அந்த வகையில், இந்த படத்தில் மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, இன்னொரு மலையாள நடிகை அபர்ணா வினோத் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார். இந்தநிலையில், தற்போது ரோஷன் பசீர் என்றொரு மலையாள நடிகரும் பைரவா படத்தில் இணைந்துள்ளார். இவர் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலில் நடனமாடுகிறார். இதற்கு முன்பு கமல் நடித்த பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்த நிவேதா தாமஸை பிளாக்மெயில் பண்ணும் வேடத்தில் நடித்த இவர் பின்னர், 3 ரசிகர்கள் -என்ற படத்திலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts