விஜய் படத்திலிருந்து லைகா விலகல்?

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். தற்போது மகேஷ்பாபுவை வைத்து ஸ்பைடர் தெலுங்குப்படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

ஸ்பைடர் பட பணிகளை முடித்துவிட்டு, 2017 தீபாவளிக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக சொல்லப்பட்டது. தற்போதைய தகவலின்படி, விஜய் படத்தை தயாரிக்கும் பொறுப்பிலிருந்து லைகா நிறுவனம் விலகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி மற்றும் கத்தி படங்கள் கமர்ஷியலாக வெற்றியடைந்தன. எனவே, தற்போது இயக்க உள்ள படத்தின் பட்ஜெட்டை சுமார் ரூ.100 கோடிக்கும் மேலாக எடுக்க திட்டமிட்டாராம் முருகதாஸ். அப்படி எடுக்கப்பட்டால் படத்தின் வியாபாரம் இரண்டு மடங்காக நடந்தால் தான் பெருவாரியாக லாபம் கிடைக்கும். ஆனால் அதற்கான சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் தான் இப்படத்தின் தயாரிப்பு பொறுப்பில் இருந்து விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

Related Posts