விஜய் படத்தின் கதாநாயகி – கீர்த்தி சுரேஷ்!

தெறி படத்துக்குப் பிறகு விஜய்யின் படத்தை பரதன் இயக்குகிறார். கில்லி, வீரம் போன்ற படங்களின் வசனகர்த்தாக பணியாற்றிய பரதன், விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கியுள்ளார்.

keerthy-suresh

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார்.

விஜய் 60 என்று தற்போது குறிப்பிடப்படும் இந்தப் படத்தில் விஜய்யின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இத்தகவல் இன்று வெளியாகியுள்ளது. ரஜினிமுருகன் படத்தின் வெற்றிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷுக்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு கிடைத்துவருகிறது.

அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது விஜய் படத்தில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Related Posts