விஜய் தம்பியை பாராட்டிய பாலா

இன்னும் இரண்டு ஆண்டுகளில் இவன் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஸ்டாராகி நிற்பான் என இயக்குனர் பாலா விக்ராந்தை பாராட்டியுள்ளார்.

சமுத்திரக்கனி இயக்கி நடித்துள்ள படம் தொண்டன். இந்த படத்தில் விக்ராந்த் நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பாலா பேசும்போது,

நான் இங்கிருந்து பார்த்துக்கிட்டே இருக்கேன். வேறு யார் பேசுவதையும் கேட்டுக்கிட்டு கண்ணு மட்டும் இந்த பையன் விக்ராந்தை மட்டும் தான் பார்த்துக்கிட்டு இருக்கு.

இவன் ஒரு கிரிக்கெட் வீரர். ஒவ்வொருத்தரும் பேசும்போது அவர்கள் பவுலிங் போடுறாங்கன்னு மாதிரியே தான் பார்த்துக்கிட்டு இருக்கான். கண்ணை விரிச்சு பார்க்கிறான் அது இந்த லைட்டில் தெளிவா தெரியுது.

இந்த பால் எவ்வளவு ஸ்பீடில் வரும், ஸ்பீடில் வந்தால் இதை சிக்ஸருக்கு எய்ம் பண்ணுவோமா, ஃபோருக்கு எய்ம் பண்ணுவோமா. இல்லை தலைக்கு வந்தால் கொஞ்சம் தட்டிவிட்டு எஸ்கேப் ஆகிடுவோமா. ஆனால் வர பால் அனைத்தையும் அடிக்க வேண்டும் என்ற ஒளி அவன் கண்ணில் தெரிகிறது.

இந்த பையன் பர்ஸ்ட் டைம் என்னை பார்க்க வந்தபோது வாங்க சேது உட்காருங்க என்றேன். சார் என் பெயர் சேது இல்லை விக்ராந்த் என்றார். எனக்கு என்ன பதிஞ்சிடுச்சுன்னா சுசீந்திரன் இயக்கிய பாண்டியநாடு படத்தில் சேது என்கிற கேரக்டர் பண்ணியிருந்தான் இந்த பையன். எனக்கு அந்த சேது என்கிற கேரக்டராகவே பதிந்தது. அந்த அளவுக்கு அந்த படத்தில் ரொம்ப பிரமாதமாக பண்ணியிருந்தான்.

இப்ப நான் சொல்றேன் ரொம்ப சத்தியப்பூர்வமான வார்த்தை. இந்த பையனை நான் சொல்றேன் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் கொஞ்சம் தாமதமாகிடுச்சு. இப்பவும் ஒன்னும் இல்ல வயதில் சின்னப் பையன் தான். இன்னும் இரண்டு ஆண்டுகளில் இவன் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஸ்டாராகி நிற்பான். இவனை நான் ரொம்ப ரொம்ப நம்புகிறேன். வாய்ப்புகள் இந்த திறமைசாலியை தேடி வரும். இவனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றார் பாலா.

Related Posts