விஜய், ஜெயம் ரவி வரிசையில் சிவகார்த்திகேயன்

இயக்குனர் மோகன்ராஜா இதுவரை இயக்கியுள்ள 7 படங்களில் 6 படங்களில் அவரது தம்பியான ஜெயம் ரவி தான் நடித்துள்ளார். மீதியுள்ள ஒரேயொரு படமான வேலாயுதத்தில் விஜய் நடித்திருந்தார். இவர் இயக்கிய படங்களில் கடைசியாக வெளிவந்த ‘தனி ஒருவன்’ படம் மட்டும்தான் நேரடி தமிழ் படமாக இருந்தது. மற்ற படங்கள் அனைத்தும் தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்டவை.

ரீமேக் படங்களாகட்டும், நேரடி தமிழ் படமாகட்டும் இதுவரை அவர் இயக்கிய படங்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. அதுமட்டுமில்லாமல் அனைவரும் ரசிக்கும்படி இயக்குவதில் திறமை வாய்ந்தவர் மோகன் ராஜா. அந்த வரிசையில் இவர் இயக்கிய அனைத்து படங்களும் பெரிய வெற்றிகளை பெற்றுள்ளன. இந்நிலையில், தற்போது தனது தம்பி ஜெயம் ரவி மற்றும் விஜய்க்கு அடுத்தபடியாக வேறொரு நடிகரின் படத்தை இயக்க மோகன்ராஜா முடிவு செய்துள்ளார்.

அதன்படி, சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படத்தை மோகன் ராஜா இயக்கவிருக்கிறார். இப்படத்தை ஆர்.டி.ராஜாவின் 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இந்நிறுவனம் ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடிக்கும் மற்றொரு படத்தை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts