விஜய் சேதுபதி, டி.ஆர் இணைந்து நடித்துள்ள காட்சிகள் அரங்கை அதிரவைக்கும்

கே.வி.ஆனந்த்-விஜய் சேதுபதி முதன்முறையாக இணையும் படம் `கவண்’. கடந்த ஆண்டு தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த விஜய் சேதுபதி `கவண்’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். இப்படத்தில் இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

அவரது அடுக்குமொழி வசனமும் அடங்காத நடிப்பும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையப்போகிறது. குறிப்பாக விஜய் சேதுபதி – டி.ஆர் இருவரும் இணைந்து நடித்துள்ள காட்சிகள் அரங்கை அதிரவைக்கும் என்று படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் நடிகர் பாண்டியராஜன், விக்ராந்த், அயன் ஆகாஷ், நண்டு ஜெகன், பவர் ஸ்டார், போஸ் வெங்கட் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருக்கும் இப்படத்தை கல்பாத்தி எஸ்.அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டைன்மண்ட் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

இப்படத்தை மார்ச் 24 அல்லது 31 தேதிகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts