விஜய் சேதுபதி டி.ஆர். இணையும் ‘கவண்’

விஜய் சேதுபதி நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் உருவாகி வருகிறது. டி.ராஜேந்தர், மடோனா செபஸ்டியான் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதில், விஜய் சேதுபதி – டி.ராஜேந்தர் இருவரும் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

vijay-sethu-pathy-tr-rajenthar

இப்படத்திற்கு தலைப்பு வைக்காமலேயே படக்குழுவினர் படமாக்கி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் தலைப்பை வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். அதன்படி, இப்படத்திற்கு ‘கவண்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

‘கவண்’ (உண்டிக்கோல்) என்பது கிராமங்களில் வயல்வெளிகளில் அமரும் பறவைகளை விரட்டுவதற்காக பயன்படுத்தும் ஆயுதம் ஆகும். இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரிக்கும் 18-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts