விஜய் ஒரு சூப்பர் ஸ்டார்: எமி ஜாக்சன் புகழாரம்

விஜய் நடிக்கும் அவரது 59–வது படத்துக்கு ‘தெறி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய் நடித்த ‘புலி’ படத்தில் வேதாள உலகம் இடம் பெற்றது. இதையடுத்து அஜீத் படத்துக்கு ‘வேதாளம்’ என்று பெயர் சூட்டடப்பட்டது.

Vijay-59s-Theri-First-look

இந்த படத்தில் அஜீத், ‘தெறிக்க விடலாமா’ என்று பேசும் வசனத்தை தொடர்ந்து விஜய் படத்துக்கு ‘தெறி’ என்று பெயர் வைத்துள்ளனர் என்று இரண்டு தரப்பு ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.

இந்த படங்களுக்கு பெயர் வைக்க எது காரணமாக இருந்தாலும் ‘வேதாளம்’ பெயரை அஜீத் ரசிகர்கள் வரவேற்றது போலவே, ‘தெறி’ தலைப்பும் விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ‘தெறி’ படத்தில் விஜய் போலீஸ் அதிகாரி உள்பட 3 வேடங்களில் நடிப்பது போன்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

அட்லீ இயக்கும் இந்த படத்தில் சமந்தா, எமிஜாக்சன், பிரபு மகேந்திரன், மீனாமகள் நைனிகா ஆகியோர் நடிக்கிறார்கள். தெறி படத்துத்தின் தெலுங்கு பதிப்புக்கு ‘மெருடி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.

இந்த படத்தில் நடிக்கும் எமிஜாக்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘விஜய் தான் சூப்பர் ஸ்டார். நான் அவருடன் ‘தெறி’ படப்பிடிப்பில் மகிழ்ச்சியுடன் நடித்து வருகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘புலி’ படத்தை ஒளிப்பதிவு செய்த நடராஜ் ஏற்கனவே, ‘விஜய் சூப்பர் ஸ்டார்’ என்று கூறி இருந்தார். இப்போது எமிஜாக்சனும், விஜய் சூப்பர் ஸ்டார் என்று பாராட்டி இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Related Posts