விஜய் உடன் மோதும் சிம்பு?

விஜய்க்கு இருக்கும் மாஸ் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர் நடித்த படம் வெளியாகும்போது நம் படம் ரிலீஸ் ஆனால் காணாமல் போய் விடுவோம் என்று பல முன்னணி ஹீரோக்கள் பயந்து ஒதுங்குவது வாடிக்கை. இந்த சூழலில் நடிகர் சிம்பு, விஜய்யுடன் மோத தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

viajy-simbu

கலைப்புலி தாணு தயாரித்த தெறி’ படத்தைத் தொடர்ந்து தற்போது பரதன் இயக்கத்தில் தனது 60ஆவது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். திருநெல்வேலியை கதைக்களமாகக் கொண்டு உருவாகிவரும் இப்படத்தை 2017 பொங்கல் ரிலீஸாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், அதே பொங்கல் தினத்தில் தான் நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை வெளியிட சிம்பு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். எனவே பலான விஷயங்கள் இந்தப் படத்தில் சற்று தூக்கலாக இருக்கும் என தெரிகிறது.

Related Posts