விஜய் இதுவரை நடிக்காத கதை பைரவா!

அழகிய தமிழ் மகன் படத்தில் முதன்முறையாக விஜய்யை இரண்டு வேடங்களில் இயக்கியவர் பரதன். அதையடுத்து மீண்டும் தற்போது விஜய்யை இயக்கி வரும் படத்திலும் அவரை இரண்டுவிதமான வேடங்களில் இயக்கிக்கொண்டிருக்கிறார்.

vijay

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், ஜெகதிபாபு, டேனியேல் பாலாஜி, தம்பி ராமைய்யா, மைம் கோபி, சதீஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இதுவரை அந்த படம் குறித்து எந்த தகவல்களையும் வெளியிடாமல் சீக்ரெட்டாக வைத்திருந்த டைரக்டர் பரதன் தற்போதுதான் பைரவா குறித்து வாய் திறக்கத் தொடங்கியிருக்கிறார்.

அந்த வகையில், பைரவா படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் நிலையில், இப்போதே பெரிய அளவில் வியாபாரமாகி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் பைரவா படத்தின் கதை குறித்து டைரக்டர் பரதன் கூறுகையில், பைரவா படத்தின் கதை சமூகத்துக்கு சொல்லப்பட வேண்டிய விசயம். இந்த படம் பார்க்கும் ரசிகர்கள் இது இன்றைய நிலையில் தேவையான ஒரு படம்தான் என்று சொல்வார்கள். அந்த வகையில், விஜய் இதுவரை எத்தனையோ படங்களில் நடித்திருந்தபோதும் அவர் இதுவரை நடிக்காத புதுமையான கதையாக இந்த பைரவா படம் இருக்கும் என்கிறார் பரதன்.

Related Posts