விஜய், அஜித், கார்த்திக் நடிக்கும் ‘கண்டுபிடி கண்டுபிடி’!

என்னடா இது… இவங்க மூணு பேரும் எப்போ சேர்ந்து நடிக்க ஆரம்பிச்சாங்கன்னு கேக்கறீங்களா…

kandupidi-andupidi-1

இவர்கள் புதுசு.. மாஸ்டர் விஜய், மாஸ்டர் அஜித், மாஸ்டர் கார்த்திக், மாஸ்டர் பழனி என நான்கு சிறுவர்கள் இணைந்து நடித்த படம்தான் இந்த கண்டுபிடி கண்டுபிடி. மூவி பஜார் நிறுவனம் சார்பில் கல்கி யுவா தயாரிப்பில் ராம்சுப்பாராமன் இயக்கியுள்ளார்.

படம் குறித்து ராம்சுப்பாராமன் கூறுகையில், “திரைப்படங்களில் திருமணம் என்பது படத்தின் கடைசியில் சில மணித்துளிகள் வரும் காட்சியாகவே இருக்கும். ஒரு முழு திரைப்படக் கதையும் திருமணச் சூழலில் நடக்கும் படியாக இருந்தால் எப்படியிருக்கும்… அப்படியொரு கலகலப்பான படம்தான் “கண்டுபிடி கண்டுபிடி”.

kandupidi-andupidi-2

படத்தின் முன்பாதியில் திருமண மண்டபம், மொய், விருந்து, திருமண சடங்குகள் போன்றவற்றை நகைச்சுவையுடன் விலாவாரியாக சொல்லியிருப்பது விலா நோக சிரிக்க வைக்கும்படி இருக்கும். கலகலப்பாக போகும் கதையில் எதிர்பாராத ஒரு சம்பவமும் உண்டு. அது கதையின் போக்கை எப்படி மாற்றம் செய்வது என்பதே மீதி கதை,” என்றார்.

தயாரிப்பாளரான கல்கி யுவாதான் படத்துக்கு இசையமைப்பாளரும். ஜூலையில் வெளியாகிறது கண்டுபிடி கண்டுபிடி.

Related Posts