விஜய்யை முந்தி விட்டார் சிவகார்த்திகேயன்?

தமிழ் ஹீரோக்கள் எல்லாம் இப்போது தமிழோடு நிறுத்திக் கொள்ளாமல் இன்னொரு மொழி மார்க்கெட்டிலும் கவனம் செலுத்துகிறார்கள்.

சூர்யா, கார்த்தி, விஷால், விஜய் ஆண்டனி ஆகியோர் தெலுங்கு பக்கமும் கவனம் செலுத்தி தங்கள் படங்களை ரிலீஸ் செய்கிறார்கள். ஆனால் விஜய் தெலுங்கு மட்டும் அல்லாது கேரள பக்கமும் தன் படங்களுக்கு மார்க்கெட் உருவாக்கி இருக்கிறார்.

விஜய்யின் தமிழ் படங்களுக்கு மலையாள உலகில் நல்ல வரவேற்பு உண்டு. இந்த இடத்தைப் பிடிக்க சிவகார்த்திகேயன் திட்டமிடுகிறாரா என்று கேள்வி எழுப்புகிறார்கள், பாக்ஸ் ஆபீஸில்.

சிவா இப்போது நடித்துக்கொண்டிருக்கும் வேலைக்காரன் படத்தில் வில்லனாக முக்கிய வேடத்தில் மலையாளத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில் நடிக்கிறார். எனவே கேரளாவிலும் பெரிய பிசினஸ் ஆகும் வாய்ப்பிருக்கிறது.

ஆக, விஜய்யை முந்தி விட்டார் சிவகார்த்திகேயன் என்று விரைவில் செய்தி வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Related Posts