விஜய்யை மிரட்டும் 5 வில்லன்கள்!

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 60வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. திருநெல்வேலி மண்வாசனைக் கதையில் பாபநாசம் படத்தில் கமல் நடித்தத்தைத் தொடர்ந்து விஜய்யும் இந்த படத்தில் முதல்முறையாக நெல்லை தமிழ் பேசி நடிக்கிறார்.

vijay

அதனால் ஓரளவு அந்த வட்டார வழக்கு வார்த்தைகளை தெரிந்து கொண்டு வசன காட்சிகளில் நடித்து வருகிறாராம். மேலும், இந்த படத்தில் ஆரம்பத்தில் லிங்கா வில்லன் ஜெகபதிபாபு மெயின் வில்லனாகவும், இன்னொரு வில்லனாக டேனியேல் பாலாஜி ஆகியோர் நடிப்பதாகத்தான் கூறப்பட்டது.

ஆனால் இப்போது விசாரித்தால் விஜய்யின் 60வது படத்தின் மொத்தம் 5 வில்லன் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அந்த வகையில், ஜெகபதிபாபு, டேனியேல் பாலாஜியைத் தொடர்ந்து கபாலி வில்லன் மைம் கோபி, ஹரிஸ் உத்தமன், சரத்லோகித்ஸ்வா என 5 வில்லன்கள் நடிக்கிறார்களாம்.

ஆனால் இந்த வில்லன் மொத்தமாக விஜய்யுடன் மோதாமல் ஒவ்வொருவரும் கதையின் ஒவ்வொரு கட்டத்தில் மோதிக்கொள்கிறார்களாம். அந்த வகையில், குடும்ப பின்னணி கதை என்றாலும், அதிரடி சண்டை காட்சிகளும் இப்படத்தில் உள்ளதாம்.

Related Posts