விஜய்யை மிரட்டிய டைரக்டர் மகேந்திரன்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘தெறி’. இந்த படத்தில் போலீசாக நடித்துள்ள விஜய், குற்றவாளிகளை தேடி மூன்று மாநிலங்களுக்கு செல்கிறாராம். அப்போது ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொரு பெயருடன் ஒரு கெட்டப்பில் அவர் என்ட்ரி கொடுக்கிறாராம். ஆக, ஒரு போலீஸ் 3 கெட்டப்பில் நடித்துள்ள படம் தெறி. அதோடு, மூன்று கெட்டப்புகளிலும் வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுத்துள்ள விஜய், டப்பிங்கிலும் வித்தியாசப்படுத்தி பேசியிருக்கிறாராம். அதனால் தெறி விஜய்யை பல பரிமாணங்களில் வெளிப்படுத்தும் படமாக அமைந்திருக்கிறது.

vijay-mahentheran

மேலும், இந்த படத்திற்காக சில பாலிவுட் வில்லன்களை பரிசீலனை செய்து வந்த அட்லி, ஒருநாள் டைரக்டர் மகேந்திரனைப் பற்றி சொன்னபோது, உடனே ஓகே சொன்னாராம் விஜய். அவரது படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்படிப்பட்ட ஒரு நல்ல டைரக்டர் என் படத்தில் நடிப்பது எனக்கு சந்தோசமான விசயமே என்றாராம். பின்னர், ஸ்பாட்டில் அவர் நடித்ததைப் பார்த்து மிரண்டு விட்டாராம் விஜய். நடிப்புக்கு அவர் புதுசாக இருந்தாலும் சினிமாவில் பெரிய அனுபவசாலி. அந்த வகையில், எனது ஒவ்வொரு படங்களிலுமே பலதரப்பட்ட வில்லன்களை பார்த்திருக்கும் எனக்கு அவரது நடிப்பு மிக வித்தியாசமாகவும், புதுமையாகவும் உள்ளது. அந்த அளவுக்கு வில்லத்தனத்தை அவர் தனது கண்களில் பிரதிபலித்தார் என்று டைரக்டர் மகேந்திரன் நடிப்பால் தன்னை மிரட்டியதை கூறிவருகிறார் விஜய்.

Related Posts