விஜய்யுடன் மோதுகிறார் ராகவா லாரன்ஸ்!

ரஜினியை வைத்து சந்திரமுகி படத்தை இயக்கிய பி.வாசு. அந்த படத்தில் இரண்டாம் பாகமாக இப்போது சிவலிங்கா படத்தை இயக்கி வருகிறார்.

கன்னடத்தில் சிவராஜ்குமாரை வைத்து சிவலிங்கா படத்தை இயக்கிய அவர், அதே பெயரில் தமிழில் இப்போது ராகவா லாரன்சை வைத்து ரீமேக் செய்து வருகிறார். இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங், வடிவேலு, ஊர்வசி உள்பட பலர் இப் படத்தில் நடிக்கிறார்கள்.

மேலும், இந்த படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதே நாளில் விஜய் நடித்து வரும் பைரவா படமும் திரைக்கு வருகிறது. என்றாலும், விஜய் படத்தில் இருந்து மாறுபட்ட கதையில் சிவலிங்கா உருவாகியிருப்பதால் வசூல்ரீதியாக எந்த பாதிப்பும் வராது என்று தைரியமாக களமிறங்கி விடுகிறார்களாம். அதோடு, விஜய் நடித்து வரும் பைரவா டைட்டீல் ராகவா லாரன்ஸ்க்கு சொந்தமானது. விஜய் கேட்டுக்கொண்டதால் அந்த டைட்டீலை விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts